பயமாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த உலகத்தில் யோக்கியன் என்று சொல்வதற்கு ஒருவன் கூட இல்லாமல் போய் விடுவார்களோ என்று...எனக்கு தெரிந்த வரை அரசியல்,சமூகம்,பொருளாதாரம்,
அன்றாட நிகழ்வுகள்,சாதி,மதம்,இனம்,லஞ்சம்,ஊழல்,விலைவாசி,அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடு,நேரடி அன்னிய முதலீடு, விவசாய நிலம் அழிக்கப்படுதல், விவசாயத்தின் இன்றைய நிலை, ஏரி, குளங்கள் தூர்வாரப்படுதல், காடுகள் அழிப்பு, நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் இப்படி தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ள ஒரு நாடு...மக்கள் தொகையில் சரிபாதி இளைஞர்கள்...
இவர்களில் எத்தனை பேருக்கு இதை பற்றிய சரியான புரிதல் இருக்கிறது??
இவைகளை பற்றிய அடிப்படை அறிவு கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இடத்தில் இல்லை...சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால் இன்றைய இளைஞர் சமுதாயம் மிகவும் பொரையோடிப் போய் இருக்கிறது... பொறாமை, காழ்ப்புணர்ச்சி, லஞ்சம், பேராசை, பொய், சுயநலம் இவை இல்லாத இளைஞர்களை பார்ப்பது மிக அரிதாகி விட்டது...அறிவிற்கான தேடல்,சுய ஒழுக்கம் இதெல்லாம் கேளிக்கூத்தாக மாறிவிட்டது...தனக்கு நடக்காத வரை எதுவும் தவறில்லை,தனக்கு சாதகமாக நடந்தால் அது தவறே இல்லை என்றாகிவிட்டது...இதில் இவற்றை எல்லாம் பின்பற்றாமல் நல்லவனாக வாழ நினைக்கும் இளைஞன் கேலிப்பொருளாக பார்க்கப்படுகிறான்...
No comments:
Post a Comment